fbpx
Homeபிற செய்திகள்திண்டல் மலையில் கூட்டுறவு வாரவிழா கருத்தரங்கு

திண்டல் மலையில் கூட்டுறவு வாரவிழா கருத்தரங்கு

68-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் 6-ம்நாள்‘ இளைஞர் மகளிர் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான கூட்டுறவு அமைப்புகள்’ எனும் தினமாக இன்று (நவ.19) ஈரோடு வட்டத்திற்கு உட்பட்ட திண்டல் மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா தலைமை வகித்து பேசும்போது, 7 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவு கொள்கைகளை, கூட்டுறவு மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களும் விவசாய பெருமக்களும் அறியும் வகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கூட்டுறவு இயக்கமானது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடும் உறுப்பினர் களின் பொருளாதார மேம்பாட்டை அடையச் செய்யும் நோக்கோடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

திண்டல் மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.தேவராஜ், காசிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திண்டல் மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செய லாளர் எஸ்.அன்பழகன் வரவேற்றார். காசிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img