fbpx
Homeபிற செய்திகள்தருமபுரியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்த எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ.

தருமபுரியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்த எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ.

தருமபுரி நகராட்சியில், ராமலிங்கம் தெரு, சந்தைப்பேட்டை, குமாரசாமி பேட்டை, அம்பேத்கார் காலனி ஆகிய பகுதிகளிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமாரன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவண பாபு ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, தருமபுரி நகராட்சிக்கு பஞ்சபள்ளி அணையின் குடிநீர் பயன்பாட்டிற்கு தற்போது வழங்கப்படுகிறது. அங்கு பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரை பிடித்து அருந்தி மக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் தூய்மையாக உள்ளதா என்பதை எம்எல்ஏ பரிசோதனை செய்தார்.

நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அளவில் தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் வழங்குதல், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரித்தல், அப்பகுதிகளில் காலியாகவுள்ள இடங்களை பலவகை மரக்கன்றுகள் வைத்து பராமரித்தல், பழைய வாகனங்கள், பழைய இரும்பு பொருட்கள், பழைய மினி டேங்குகள் போன்ற பயன்படாத நிலையிலுள்ள பொருட்களை ஏலம் விட்டு அகற்றுதல், தருமபுரி நகராட்சி, மதிகோண்பாளையம் கொட்டாய்மேடு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி உடனடியாக குடிநீர் வழங்குதல், தருமபுரி நகராட்சி – குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள பணியாளர் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்துதல், தருமபுரி – எஸ்.வி.ரோடு சாலை, தருமபுரி – திருப்பத்தூர் சாலை, தருமபுரி – பென்னாகரம் மெயின் ரோடு, தருமபுரி – கிருஷ்ணகிரி மெயின் ரோடு ஆகிய நகராட்சியின் முதன்மை சாலைகளிலுள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரித்தல் போன்றவற்றை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளிடம் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப் பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்ன சாமி, மாநில துணை அமைப்பு செயலாளர் வாசுநாயுடு, மாவட்ட துணை செயலாளர் வே.முத்துகுமார், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் தகடூர்தமிழன், நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் சிவா, கிருஷ்ணன், சுபாஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img