fbpx
Homeபிற செய்திகள்டிரான்ஸ்பார்மரில் அலுமினிய ஏணி பட்டு பெயிண்டர் பலி

டிரான்ஸ்பார்மரில் அலுமினிய ஏணி பட்டு பெயிண்டர் பலி

கோவை சுந்தராபுரம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜ்குமார் (27). மைல் கல் அடுத்த சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பவருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் பீளமேடு பி கே டி நகர் பகுதியில் லட்சுமி மோகன் ரெசிடென்சி என்ற அப்பார்ட்மெண்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அலுமினிய ஏணி எடுத்துக்கொண்டு ராஜ்குமார் சென்றார் .

எதிர்பாராதவிதமாக அலுமினிய ஏணி அருகிலிருந்த டிரான்ஸ்பார்மரில் பட்டது. உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

இது குறித்து முகமது ரபிக் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பெயிண்ட் அடிக்க அனுமதித்த காண்ட்ராக்டர்கள் தினேஷ் (31) மற்றும் பிரபு (37) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img