fbpx
Homeபிற செய்திகள்ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் பயன் படுத்தும் அனைத்து அத்தியா வசிய பொருட்கள் மீதும் ஜிஎஸ்டியை உயர்த்தி இருப்பது ஏற்புடையது அல்ல. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும். மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து ஜூலை 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர் டல்லஸ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தயாலிங்கம், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட அவை தலைவர் கொப்பையா பாண்டியன், மாநகர் மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்ட துணை செயலாளர்கள் அலெக்ஸாண்டர், ராஜ், பொதுக்குழு உறுப்பி னர்கள் இராஜ பொம்மு, பிரபாகரன், பரமசிவம், பெருமாள்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அதிசயராஜ், தங்கசாமி, மாரியப்பன், சண்முகம், ஆறுமுகபெருமாள், பொன் ராஜ், பகுதி செயலா ளர்கள் சின்னதுரை, நாராயண முர்த்தி, சம்சூதின், பேச்சிமுத்து, ராஜாமுகமது, கந்தசாமி, அரசமுத்து, தோப்பு அரசமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img