தைப்பொங்கலை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ வெல்லம் 1 முழு கரும்பு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 1601 நியாயவிலைக் கடைகள் மூலம் 10 லட்சத்து 58 ஆயிரத்து 29 அரிசி அட்டைதாரர்களுக்கு 57 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.
இதில், திமுக சட்ட மன்ற உறுப் பினர் ராஜேந்திரன், நாடா ளுமன்ற உறுப்பினர் பார் த்திபன் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளொன்றுக்கு ஒரு நியாய விலைக் கடைக்கு 200 பேர் வரை பரிசு தொகுப்பு வழங்க முன்கூட்டியே டோக்கன் கள் வழங்கப் பட்டுள்ளன.
பரிசு தொகுப்பை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைª வளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவு றுத்தப்பட்டுள்ளது.



