சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் 24-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக சட் டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
அமைச்சர் ரகுபதி பேசியதாவது: பொது மக்களுக்கான சட்ட அறிவிப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில், மாணவர்கள் பொது மக்களுக்கு பாலமாக இருக்க வேண்டும்.
சட்டக்கல்லூரி மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு, முதல்வர், மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.
மேல்நிலை கல்வியி லேயே சட்ட வடிவங்களை பாடப்புத்தகங்களில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. அதனையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வரும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சட்டக் கல்லூரி ஆசிரியர், நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.



