சென்னையில் அமைக் கப்பட்டுள்ள, நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 2021- 2022-ம் ஆண்டின் கைத்தறி துறையின் மானியக் கோரிக்கையின்போது, நெசவாளர் குறைதீர்க்கும் மையம், கைத்தறி ஆணை யரகம் சென்னையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை செயல்படுத்தும் விதமாக கைத்தறி துறை ஆணையரகத்தில் அமைக்கப்பட்டுள்ள நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தினையும், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக மனுக்களை பரிசீலிக்கும் இணைய தளத்தினையும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 23.03.2022 அன்று தொடங்கி வைத் தார்.
கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவா ளர் குறைதீர்க்கும் மையம் செயல்பட்டு வருகிறது. நெசவாளர் குறைதீர்க்கும் மையத்திற் கென முகமை அலுவலர்/ குறை தீர்க்கும் அலுவலராக துணை இயக்குநர் (அமலாக்கம்) சென்னை, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெசவாளர் குறைதீர்க்கும் மையமானது, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரால், கைத்தறி நெசவாளர்களுக்கு, சிறந்த சேவை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில், நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்ப டுத்தவும், நெசவாள ர்கள் நேரடியாக தங்களின் குறைகளை தெரிவிக்க ஏதுவாக, கைத்தறித்துறை ஆணை யரகத்தில், நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
அதற்காக: லீttஜீs://ரீபீஜீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ/பீலீறீ என்ற இணையதளம் மற்றும் wgrcchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் 24ஙீ7 மணி நேரமும்,நெசவாளர்கள் தங்கள் குறைகளை பதிவேற்றம் செய்யலாம்.
குறைதீர்க்கும் அலுவலர், கைத்தறி ஆணையரகம், குறளகம், 2-ம் தளம், சென்னை-104 என்ற முகவரியில் அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகியும்.
தொலைபேசி எண். 044 25340518 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவும் நெசவாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
விவரங்களுக்கு, கோயம்புத்தூர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குநரை 9626232827 என்ற எண்ணிலும், adhandloomcoimbatore@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.



