fbpx
Homeபிற செய்திகள்சென்னை, கோவையில் ‘ஜியூகர் சுகர் ஃப்ரீ கபே’

சென்னை, கோவையில் ‘ஜியூகர் சுகர் ஃப்ரீ கபே’

இந்தியாவின் முதல் பிரத்யேக சுகர் ஃப்ரீ கஃபே மற்றும் கிளவுட் கிட்சன்களின் சங்கிலித்தொடர் நிறுவனம் என புகழ்பெற்றிருக்கும் ஜியூகர் (Zeugar) சுகர் ஃப்ரீ, இப்போது தனது செயல்பாடுகளை தமிழ்நாட்டிற்கு விரிவாக்கம் செய்திருக்கிறது.

சென்னையில் மூன்று, கோவையில் ஒன்று என புதிய கிளைகளை இந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. ஐஐஎம்பி மற்றும் என்ஐடி கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவரால் நிறுவப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட் – அப், உடல்நலம் மீது அதிக அக்கறையும், கவனமும் செலுத்துபவர் களாக மக்கள் மாறி வருகின்ற நிலை யில் சர்க்கரை சேர்க்கப்படாத மற்றும் குறைவான கலோரி கொண்ட இனிப்புக ளுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதை தனது இலக்காக கொண்டிருக்கிறது.

2020-ம் ஆண்டில் கொச்சியில் ஒரு விற்பனையகத்துடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் 16 அவுட்லெட் களை நிர்வகித்து வருகிறது.

இப்போது தமிழ்நாடு மாநிலத்திலும் கால்பதித்திருக்கிறது. நாடெங்கிலும் 50-க்கும் அதிகமான நகரங்களில், 80- க்கும் கூடுதலான அவுட்லெட்களைக் கொண்டு, 2024-ம் ஆண்டுக்குள் அகில இந்திய அளவில் பிரபலமான பிராண்டாக உரு வாக வேண்டுமென்பதே ஜியூகர் ஃபுட்ஸ்ன் குறிக்கோளாகும்.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகையில் 12&-13 சதவிகிதத்தினர் நீரிழிவு நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய அதே அளவிலான மக்கள் சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்பவர்களாக இருக்கின்றனர் என்று இந்நிறுவனத்தின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது.

‘எமது தயாரிப்பு தொகுப்பானது சாக்லேட்டுகள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், ஐஸ் க்ரீம்கள், குக்கிகள், இந்திய இனிப்புகள், மில்க் ஷேக்குகள் என மக்களுக்கு மிகவும் பிடித்தமான அனைத்து இனிப்புகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

எமது தயாரிப்பு தொகுப்பிலுள்ள ஒவ்வொரு தயாரிப்பும் சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படுகிறது. கலோரிகளின் அளவைக் குறைப்பதற்காக கவனமாக தேர்வு செய்யப்பட்ட ஆரோக் கியமான உட்பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பதற்காக ஒரேயொரு பரிமாறல் அளவு கொண்ட பேக்குகளை மட்டுமே வழங்குகிறோம்’ என்று ஜியூகர் ஃபுட்ஸ்ன் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான ஜாவத் காதிர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img