fbpx
Homeதலையங்கம்செந்தமிழும் வாழ்த்துகிறது!

செந்தமிழும் வாழ்த்துகிறது!

திமுகழக ஆட்சி எப்போதெல்லாம் மலர்கிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் மகிழ்வார்கள்.

ஏன்? தமிழர்களுக்கும் தமிழுக்கும் அதிமுக்கியத்துவம் தரும் ஆட்சியாக இருப்பதால் தான்.

தற்போதும் தமிழக முதல்வராக வீற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தன் தந்தையார் கலைஞர் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழைப் போற்றும் – தமிழரைக் காக்கும் ஆட்சியை நடத்தி வருகிறார்.

தமிழை வளர்ப்பதிலும் தமிழர் உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். இதில் சமரசத்துக்கு இடமே இல்லை.

தமிழ்நாட்டு அரசுப்பணிகள் தமிழர்களுக்கே கிடைக்கும்படி, அதிமுக ஆட்சியால் இழந்த உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒரே ஒரு அரசாணை மூலம் மீட்டுத் தந்திருக்கிறார்.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்குப் பதிலாக வாயால் பாட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது-.

மறுநாளே சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் ஆரம்பத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும் நிறைவாக தேசிய கீதமும் வாயால் பாடப்பட்டுள்ளது.

அது மட்டுமா? பெயர்களை தமிழில் எழுதினாலும் அதற்கு முன்னால் போடும் முன்னெழுத்தை (இனிசியல்) ஆங்கிலத்தில் அல்லது ஆங்கில எழுத்தை அப்படியே தமிழில் எழுதுவதை தவிர்த்துவிட்டு, தந்தை பெயரில் முதலில் இருக்கும் தமிழ் எழுத்தையே பயன்படுத்துமாறும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

கரிசல் மண் எழுத்தாளர் ராஜநாராயணனுக்கு மணிமண்டபம், பிரபல எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் அரசுடமை, பாரதி ஆய்வாளர்களுக்கு விருது… என தமிழ் வளர்ச்சிப் பட்டியல் நீள்கிறது.

இப்படியெல்லாம் தமிழரைப் பற்றியும் தமிழைப் பற்றியும் இடைவிடாது சிந்தித்துச் செயலாற்றும் முதல்வரை தமிழ் ஆர்வலர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களும் வாழ்த்துகின்றனர்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக, உடனுக்குடன் அரசாணைகள் வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

அதனால் தான் அவரை நாட்டிலேயே சிறந்த முதல்வர் என தேசமே பாராட்டுகிறது. அவரது அயராத உழைப்புக்கு உயர்நீதிமன்ற நீதியரசரும் நற்சான்று வழங்கி இருக்கிறார்.

செந்தமிழும் வாயாற வாழ்த்துகிறது!

படிக்க வேண்டும்

spot_img