Homeபிற செய்திகள்கோவையில் புதிய பணிகளை துவக்கி வைத்த மேயர்

கோவையில் புதிய பணிகளை துவக்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா புனரமைத்தல், சிறுவர் விளையாட்டு திடல் அமைத்தல், நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

உடன் மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி ஆணையாளர் (காவல்) மணிகண்டன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img