fbpx
Homeபிற செய்திகள்கோவையில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கோவையில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு, ஸ்வர்கா பவுண்டேஷன், மாவட்ட நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் இணைந்து 2, 3, 4 சக்கர வாகனம் மற்றும் மின்சார சக்கர நாற்காலிகளில் ஊனமுற்றோர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்தப் பேரணியை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி மற்றும் ஸ்வர்கா பவுண்டேஷன் சொர்ணலதா ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img