fbpx
Homeபிற செய்திகள்கோவை வடக்கு மண்டலம் 42-வது வார்டு சின்னவேடம்பட்டியில் ‘வருமுன் காப்போம்’ திட்டம் துவக்கம்

கோவை வடக்கு மண்டலம் 42-வது வார்டு சின்னவேடம்பட்டியில் ‘வருமுன் காப்போம்’ திட்டம் துவக்கம்

கோவை மாநகராட்சி சின்ன வேடம்பட்டி மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை ,ஆணையாளர் மற்றும் தனி அலு வலர் ராஜகோபால் சுன்கரா நேற்று (அக்.12) குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 42-வது வார்டுக்கு உட் பட்ட சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய ஆணையாளர் கூறியதாவது:

கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்ட முகாமில் 21 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கண், மூக்கு சம்பந்தப்பட்ட பரிசோதனைகள், கோவிட் தடுப்பூசி, கோவிட் பரிசோதனை மற்றும் பல்வேறு மருத்துவ பரி சோதனைகளுக்கான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இலவச இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் முகாமிலேயே முதல் சிகிச் சையும், மருந்துகளும் இலவ சமாக வழங்கப்படும்.

பொதுமக்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு ஆரம்ப நிலையிலேயே நோய்க்கான சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இவ்வாறு மாநகராட்சி ஆணை யாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

இச்சிறப்பு முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக் குநர் அருணா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு. சதீஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், வடக்குமண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற் பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img