கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்னும் அடிப்படையில் அனைத்து கிராமப்புறங்களில் கடந்த 20-ம் தேதி முதல் தூய்மை இயக்கம் துவக்கப் பட்டது. வரும் 2-.10-.22-ம் தேதி வரை இப்ப ணிகள் நடைபெற உள்ளன.
பொது இடங்கள் மற்றும் நிறுவனங்களில் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல் (20.08.2022 முதல் 02.09.2022 வரை), பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடிநீர் சுத்தம் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல் (27.08.2022 முதல் 02.09.2022 வரை), குடிநீர் சுகாதாரம் மற்றும் வீடுகளில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம்மேற்கொள்ளுதல் (03.09.2022 முதல் 16.09.2022 வரை), ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை மற்றும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்தல் (17.09.2022 முதல் 23.09.2022 வரை) சுத்தம் மற்றும் பசுமை ஊராட்சி தொடர்பான பணிகள் மேற்கொள்ளுதல் (24.09.2022 முதல் 01.10.2022 வரை).
இப்பணிகள் தொடர்பான முன்னேற்பாடு ஒருங்கிணைப்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மாதம்பட்டி ஊராட்சி யில் கடந்த 20-ம் தேதி ‘நம்ம ஊரு சூப்பரு’ எனும் தூய்மை இயக்கத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இப்பணிகளை செயல்படுத்தி அதனை 02.10.2022 அன்று நடத்தப்படும் கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.



