கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் உள்ள சாமநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடன் வழங்கும் மேளா கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளரின் அறிவுரைப்படி நடந்தது.
முகாமில் சங்கத் தலைவர் கே.எஸ்.கிருஷ்ணசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. சுரேஷ்குமார், கூட்டுறவு சார் பதிவாளர் / கள அலுவலர் வனிதா, மேற்பார்வையாளர் சண்முகம், சங்கச் செயலாளர் கே.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



