கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 64க்குட்பட்ட கண்ணம்பாளையம், கணேசபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் மையத்தை புனரமைத்தல் மற்றும் வர்ணம்பூசும் பணியினை நேரில் பார்வையிட்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார் பள்ளியில் குடிநீர் வசதி மற்றும் கழிவறைகள் சுகாதாரமான முறையில் உள்ளதா என ஆய்வு செய்து, கழிவறைகளை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஷர்மிளா, உதவி ஆணையர் சங்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.



