கோவை அருகே பாலக்காடு மெயின்ரோடு சாவடியில் ரூ.3 கோடி செலவில் தேசபக்தி கோட்டை உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா வருகிற 14-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு தேசபக்தி கோட்டையை திறந்து வைக்கிறார் சுதந்திர போராட்ட வீரர்கள் பட அரங்கை கலெக்டர் சமீரன் திறந்துவைக்கிறார்
இதுகுறித்து ஜெய்ஹிந்த் பவுன்டேசன் நிறுவனர் வக்கீல் வி.நந்தகுமார், அரிமா மாவட்ட ஆளுனர் ஜான் பீட்டர் ஆகியோர் கூறியதாவது:-
கோவை அருகே உள்ள சாவடியில் 150 சுதந்திர போராட்ட வீரர்களின் திருஉருவ படத்தை நிரந்தரமாக பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக 8 ஏக்கர் பரப்பளவில் ரூ 3 கோடி செலவில் தேசபக்தி கோட்டை அமைக்கப்பட்டு உள்ளது.
விழாவில் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பிக்கும் வகையில் 75 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்-



