கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்துதல் குறித்து முன்னேற்பாடு கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் தலைமை யில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கொரோனா நோய் தொற்றை முற்றிலும் கட்டுப் படுத்தும் வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறிகள், நோய் பரவும் விதத்தினை கண்டறிந்து அவற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்து வது மிகவும் இன்றியமைய £தது ஆகும்.
மாநகர் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், உழவர் சந்தைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவனைகள், திரையர ங்குகள், வணிக வளாக ங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் கிருமி நாசினி தெளித்து தினந்தோறும் சுத்தப்படுத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளிக்கும் வகையில் மண்டல அளவில் குழுக்களும், வார்டு அளவில் குழுக்களும் அமைக்கப்பட்டு கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை ஏற்படுத்திட வேண்டும்.
மண்டல அளவில் கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நோய் தொற்று பாதித்தவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான மருந்துவ ஆலோசனைகள் மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், நிறுவனங்கள் உரிய கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதை கண்காணித்திட வேண்டும். இவ்வாறு ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
மாநகர நல அலுவலர் மரு.என்.யோகானந்த், மாநகர பொறியாளர் ஆர்.ரவி, உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



