கோவை. கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கணினி அறிவியல் துறை சார்பில் TRIAD INAUGURATION’ என்ற தலைப்பில் கணினி அறிவியல் துறைகளின் சங்கத் துவக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பாலுசாமி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.பிரதீபா வரவேற்றார்.
தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பி.ரமேஷ்குமார் கணினி அறிவியல் துறைகளின் சங்க உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பேசுகையில், மாணவர்கள் எப்போதும் நேர்மை, நேரம் தவறாமை, படைப்பாற்றல், குழு மேலாண்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற கடின உழைப்பும் அவசியம் என குறிப் பிட்டார். மாணவி காயத்ரி, சுபஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறைத் தலைவர் ஆர்.அஞ்சித் ராஜா நன்றி கூறினார்.



