fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனுதவி

கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனுதவி

கோவை தொண்டாமுத்தூர் வட்டம், வேடப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட் டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் அறிவுரையின்படி கடன் வழங்கும் மேளா நடைபெற்றது.

இதில் மூன்று மாற்று திறனாளிகளுக்கு ரூ.50,000 கடன்கள்
வீதமும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.9,00,000 மும், பயிர் கடனுக்கு ரூ.14,00,000 வழங்கப்பட்டது.

மேலும் டாப்கோ, டாம் செட்கோ கடன்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இம் முகாமில் துணைப் பதிவாளர் / மண்டல மேலாளர், சண் முகவேலு, பேரூராட்சி தலைவர் ரூபினி, கூட் டுறவு சார் பதிவாளர் / கள அலுவலர் முத்துக் குமார், கூட்டுறவு சங்க தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மேலாளர் ரவி மற்றும் மேற்பார்வையாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img