fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆதரவற்ற முதி யோர் இல்லத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 76வது பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தகி, வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் நகர தலைவர் தளபதி ரகமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ண மூர்த்தி, சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டார்.

இந்த விழாவின் போது, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள வயதான பெண்கள் மற்றும் ஆண்க ளுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

முன்னதாக வட்டார துணைத் தலைவர் சக்கரவர்த்தி வரவேற்புரையாற்றினார்.
முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் அசேல் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img