fbpx
Homeபிற செய்திகள்லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலராக மணிமாறன் நியமனம்

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலராக மணிமாறன் நியமனம்

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக, தமிழ கத்தை சேர்ந்தவரும், அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளின் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளருமான, ஓய்வு பெற்ற கனரா வங்கி அதிகாரி ஜி.வி. மணிமாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியின் டெல்லி தலை மை அலுவலகம் வெ ளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: லோக் ஜனசக்தி கட் சியின் அகில இந்தியத் தலைவரும், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச் சருமாகிய பசுபதி, தமிழ கத்தைச் சேர்ந்த ஜி.வி. மணிமாறனை லோக் ஜனசக்தி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமனம் செய்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சியானது, கடந்த 2000-ம் ஆண்டில், மறைந்த முன்னாள் மத் திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு, ஜனநாயக முறையில், இன, மத, சாதிபாகுபாடின்றி, சமூக நீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாக கொண்டு தோற்றுவிக்கப்பட்டது.

கட்சிக்கு 5 நாடாளுமன்ற லோக்சபா உறுப்பினர்களும், ஒரு கேபினட் அந்தஸ்துடன் கூடிய மத்திய அமைச்சரும் பொறுப்பு வகிக்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் மதுரையில் ஒரு எளிய குடும்பத்தின் முதல் விவசாய பட்ட தாரி ஆவார்.

அவர், தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கியில், ஏறத் தாழ 40 ஆண்டுகள் வங்கி மேலாளராகவும், விவசாய அபிவிருத்தி அதிகாரியாகவும் நிறைந்த அனுபவம் மிக்கவர்.

அவர் பல்வேறு முக்கிய பொறுப் புகளை திறம்பட வகித்து, சிறப்பான பொதுவாழ்வு அனுபவம் பெற்றவர். ஜி.வி.மணிமாறன் கூறியதாவது: சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, பொருளாதார மேம்பாடு, அரசியல் அதி காரமளித்தல் ஆகிய அடிப்படை கொள்கைக ளுக்கிணங்க, எந்தவித பாகுபாடின்றி, அயராமல் பாடுபடுவேன்.

பிஜேபி மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்று வேன் என்றார்.அவர் வகித்த பத விகள்: கனரா வங் கியின் இயக்குனராக 6 வருடங்கள் 2010 முதல் 2017 வரை.

ஏபிஓசி எனப்படும் அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட் டமைப்பின் (சுமார் 6 லட்சம் உறுப்பினர்களை கொண்டது) மூத்த உப தலைவராக 10 ஆண் டுகள் . ஏ.ஐ.என்.பி.ஓ.எப் எனப்படும் அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக சுமார் 8 ஆண்டுகள். கன ரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (சுமார் 45000 உறுப்பினர்களைக் கொண்டது) தேசிய பொதுச் செயலாளராக சுமார் 10 ஆண்டுகள்.

கனரா வங்கி அதிகாரிகள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் தலைவராக சுமார் 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி உள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img