fbpx
Homeபிற செய்திகள்ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மேலும் ஒரு மகுடம்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மேலும் ஒரு மகுடம்

ஐக்கிய நாடுகளின் பொறுப்புள்ள முதலீட்டுக்கான ஆதரவு கொள்கைகளில் (UNPRI – United Nations supported Principles for Responsible Investment) கையெழுத்திட்ட முதல் இந்திய காப்பீட்டு நிறுவனமாக ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் [ICICI Prudential Life Insurance] மாறியுள்ளது.

இதன் மூலம் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (Environment, Social and Governance (ESG) விவகாரங்களில் தனது அர்ப்பணிப்புமிக்க பொறுப்புணர்வை இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான அதன் பயணத்தில், இந்நிறுவனம் ESG காரணிகளை அதன் முதலீட்டு மேலாண்மை கட்டமைப்பில் ஒருங்கிணைக்கிறது.

ஒரு பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனம் என்ற வகையில் அது தனது பல்வேறு பிரிவுகளிலான வர்த்தக நடவடிக்கைகளில் நிலைத்தன்மைக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி, மணீஷ் குமார் கூறுகையில், UNPRI-ல் கையெழுத்திட்ட முதல் இந்திய காப்பீட்டு நிறுவனம் என்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இது எங்களது முதலீட்டு நிர்வாக முடிவுகளில், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைக் காரணிகளை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்புள்ள கட்டமைப்பை ஒருங்கிணைப்பதற்கான எங்கள் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்துகிறது.

கால நிலை மாற்றம் நம்மை சுற்றியுள்ள உயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது” என்றார். UNPRI என்பது ஐக்கிய நாடுகள் அவையின் இரு அமைப்புகளான UN Environment Programme Finance Initiative மற்றும் UN Global Compact ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு முதலீட்டாளர் முன்னெடுப்பாகும்.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை விவகாரங்களில் முதலீட்டு தாக்கங்களைப் புரிந்துகொள்வது மற்றும் முதலீடு செய்வது மற்றும் உரிமையாளர் முடிவுகளில் இந்த விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவ ளிப்பது ஆகியவை இதன் குறிக்கோள்கள் ஆகும்.

படிக்க வேண்டும்

spot_img