fbpx
Homeபிற செய்திகள்கன்றுக்குட்டியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு

கன்றுக்குட்டியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு

கால்நடைகளையும் நாட்டு மாடுகளையும் விதியை மீறி இறைச்சிக்காக கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை கலெக்டரிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கன்றுக்குட்டியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சட்டவிரோதமாக கண்டெய்னர் லாரிகளில் மாதம் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நாட்டு மாடுகள் கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்தப்படுகிறது.

30 முதல் 40 மாடுகள் ஒரே கண்டெய்னர் லாரியில் சட்ட விரோதமாக ஏற்றி கடத்தப்படுகிறது. போக்குவரத்து சட்டப்படி கண்டெய்னர் லாரிகளில் 5 முதல் 8 மாடுகள் வரை தான் கொண்டு செல்ல வேண்டும்.

விதிகளை மீறி தொடர்ந்து நாட்டு மாடுகளை கண்டெய்னர் லாரிகளில் கேரளாவுக்கு கடத்தி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் மிருகவதை தடுப்பு குழுவை அமைத்து குற்ற செயல்களை தடுத்து நிறுத்த வாளையார் செக்போஸ்ட், காகா சாவடி செக்போஸ்ட், வேலந்தாவளம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம் வழியாக விதிகளை மீறி நாட்டு மாடுகளை லாரிகளில் கடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img