குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்,ஒரே பாலிசியில் உடல்நல காப்பீடுடன், எல்ஐசி யின் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமான ஜீவன் ரக்ஷக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை தின பயன்கள், பல்வேறு சிறிய, பெரிய அறுவை சிகிச்சைகள், உடல் நல பரிசோதனை என பல பயன்கள் இத்திட்டத்தில் உள்ளன.
பாலிசி காலத்தில் குடும்பத்தலைவர் இறக்க நேரிட்டால், நிபந்தனைக்கு உட்பட்டு, அடுத்த 15 ஆண்டுகள் வரை, பிரீமியம் செலுத்தாமலேயே காப்பீடு தொடரும் என்பது பாலிசிதாரர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
கோவை எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் ஆரோக்கிய ரக்ஷக் புதிய பாலிசி அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய திட்டத்தை கோவை கோட்ட முதுநிலை கோட்ட மேலாளர் எம்.பிரசன்னன் அறிமுகப்படுத்தினார்.
இதில் வணிக மேலாளர் எஸ்.கோவிந்தராஜ் வங்கி காப்பீட்டு வணிக மேலாளர் என்.சுப்பிரமணி மற்றும் எல்ஐசி அதிகாரிகள் கலந்து கொண்டனர்
திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது கோவை எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம்.
இதில் 26 அலுவலகங்கள் 20 துணை அலுவலகங்கள் 13000 முகவர்கள் கோவை கோட்டத்தில் உள்ளனர்.



