ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்சார்பில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கு விக்கும் வகையில், நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்கும் திட்டத் தினைமாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின்சார்பில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கு விக்கும் வகையில், நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்கும் திட்டத்தின் கீழ், 309 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மானியம் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் ஊராட்சி ஒன்றியத்தில் நிரந்தர காய்கறி பந்தல் அமைக் கப்பட்டிருந்ததை செய்தியாளர் பயணத்தின்போது, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரி வித்ததாவது:
கோபிசெட்டிபாளையம் பகுதி யில் தோட்டக்கலைத்துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக கொடி வகை காய்கறிகளான பீர்க் கன், புடலை, அவரை மற்றும் சுரை போன்ற காய்கறிகளை சாகு படி செய்ய நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க 50 சதவீத மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.2.00 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 309 பயனாளிகளுக்கு 133 எக்டர் பரப்பில் அமைத்த தற்கு ரூ.2.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பந்தல் மூலம் கொடிவகை காய்கறிகளை சாகுபடி செய் வதால் நல்ல மகசூலும் அன்றாட வருமானமும் கிடைப்பதால் இத்திட் டத்திற்கு விவசாயிகளிட மிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரைகரை பகுதியில் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எனவே, விவசாயிகள் அரசால் வழங்கப்படும் பல்வேறு திட் டங்களை அறிந்து கொண்டு, நல்ல முறையில் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தினை பெருக்கி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி ஊராட்சி பிள் ளையார்கோவில் துறை பகுதி யில் செயல்படும் கிராம நிர் வாக அலுவலகத்தினையும், கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் பள்ளியில் செயல்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியம், கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாளர் வருகை பதிவேடு, சத்துணவு மாணவர்கள் சேர்க்கை பதிவேடு, உணவு பொருட்கள் இருப்பு பதிவேடு, இணை உணவுகள் தொடர்பான பதிவேடு, வரவு செலவு பதிவேடு, சுவை பதிவேடு மற்றும் பார்வையாளர் குறிப்பு ஆகியவற்றினையும், பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை சுவைத்து பார்த்தார்.
இந்த ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் இராம கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரவடிவேல், மைதிலி, கோபி வட்டாட்சியர் ஆயிஷா ஆகியோர் உடனிருந்தனர்.



