கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டுறவு பண்டகத்தின் சார்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆவின் பாலகம், கூட்டுறவு சிற்றுண்டி நிலையம், ஸ்டேஷனரி பிரிவை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணைப்பதிவாளர் பெ.கிருஷ்ணன், ஆவின் பொதுமேலாளர் ப்பி.ராமநாதன், ஆவின் உதவி பொது மேலாளர் நாகராஜ், மருத்துவக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



