தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை தொ டர்ந்து, மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அதே தீர்ம £னத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:
+2 மதிப்பெண்களின் அடிப் படையில், நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி, மருத்துவ கல்வி சேர்க்கையில் மாநில அரசின் இடங்களுக்கு பிரச்சினை இன்றி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
ஆகையால், நீட் முறை அறிவிப்பதற்கு முன்பே, பொது நுழைவுத் தேர்வை தமிழ்நாடு நன்கு ஆராய்ந்து நீக்கி, ஒளிவு மறைவற்ற ரீதியில் மாணவர் சேர்க்கையை நடத்தி வந்த நிலையில் தான், மாநில அரசின் மருத்துவ இடங்க ளுக்கு அறிமுகப்படுத்திய நீட் முறையை, தமிழ்நாடு, அறிமுக காலத்திலிருந்தே அதிகாரபூர்மவமாகவும், சட்டரீதியாகவும் மற்றும் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியும், கொள்கை ரீதியாகவும் தொட ர்ந்து எதிர்த்து வருகிறது.
மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான போட்டித் தேர்வுகளுக்காக எடுக்கப்படும் வகுப்புகள் மூலம் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாண வர்களுக்கு போட்டித் தேர்வு எதிர்மாறாக மற்றும் சிரமமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் ‘நீட் தேர்வு’ முறையை எதிர்க்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வை மீறியும், 2017ஆம் ஆண்டுக்கு பிறகு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கை நீட் அடிப்படையில் தான் நடைபெற்று வருகிறது
. இதிலிருந்து முறையாக விலக்கு பெற, ஏற்கனவே 2017ல் இயற்றிய சட்டத்திற்கு மாண்புமிகு குடிய ரசுத் தலைவரால் ஒப்புதல் நிறுத்தி வைத்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் மாண்பு மிகு ஓய்வு பெற்ற நீதியரசர் கி.ரி. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு இது குறித்து ஆராய்ந்து, விரிவாக அறிக்கை பெற்று, அதன் பின்பு தான் இந்த புதிய சட்ட முன்வடிவு 13.09.2021ல் ஒருமனதாக தமிழ் நாடு சட்டமன்றத்தில் இயற் றப்பட்டதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.
இதற்கான விரிவான காரணங்கள் மற்றும் விளக் கங்கள் தெளிவாக இந்த சட்டமுன் வடிவினை ஏற்க னவே முன்மொழியும்போது எடுத்துரைத்துள்ளேன்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர் வினை பிரதிபலிப்பதாக உள்ள இந்த சட்ட முன்வடிவை, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அரசியல் சட்ட அமைப்பின் படி, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு 18.9.2021 அன்று அனுப்பப்பட்டது.
அதன் பிறகு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு ஆளுநரை நேரில் சந்தித்து, 27.11.2021 அன்றும் 14.10.2021 அன்றும் வலியுறுத்தினார்கள்.
8.1.2022 அன்று நடந்த அனைத்து சட்டமன்ற கட்சி கூட் டத்தின் வாயிலாகவும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. இருப் பினும், 142 நாட்களுக்கு பிறகு, சில காரணங்களைச் சுட்டிக்காட்டி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களின் மறுபரிசீலனைக்கு மாண்புமிகு ஆளுநர், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200ன் படி சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு சட்ட முன்வடிவு குறித்த சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால், மீண்டும் மாண்புமிகு ஆளுநர் மூலம் இந்த சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமே தவிர, தன்னிச்சையாக ஆளுநர் சம்பந்தப்பட்ட சட்ட முன் வடிவை திருப்பி அனுப்பியுள்ளது, அரசியல் சட்ட அமைப்பின்படி சரியான முடிவு அல்ல.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ள கருத்தினையும், அதன்மீதான அரசின் விளக்கங்களையும் ஒவ்வொன்றாக உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான விபரங்களை இந்த அவை முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கை தான் இந்த சட்ட முன்வடிவிற்கு அடிப்படை என்று மாண்புமிகு ஆளுநர் கூறியுள்ளார்.
நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு, இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, சட்ட நுட்பங்களை ஆராய்ந்து, கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட மாணவர் சேர்க்கையின் புள்ளி விவரங்களின் அடிப் படையிலேயே அறிக்கையை அளித்துள்ளது.
உண்மை நிலை என்னவென்றால், நீதியரசர் கி.ரி.ராஜன் அவர்கள் தலை மையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு இது குறித்து விரிவாக ஆய்வு செய்தும், பொதுமக்களின் கருத்தினைப் பெற்றும், சட்ட நுட்பங்களை விரிவாக ஆராய்ந்தும், ஏழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அரசை பொறுத்தமட்டில், இந்த ஏழு பரிந்துரைகளை மதிப்பிற்குரிய தலைமைச்செயலர் அவர்களின் தலைமையில் பல்வேறு செயலர்களை கொண்ட குழு ஆராய்ந்து, அதில் உள்ள 3வது பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, சட்டத்துறை மூலம் ஆராய்ந்து, இந்த சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகையால், மாண்புமிகு ஆளுநர் கூறியவாறு, ஏதோ அறிக்கையின் அடிப்படையில் அறிமுகப் படுத்தப்பட்ட சட்டம் என்பது முற்றிலும் தவறான கருத்து.
நீதியரசர் தலைமையிலான உயர்மட்டக்குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நீட் நோக்கமற்றது, நீட் தேர்வு தகுதிக்கு எதிரானது என்றும், நீட் தேர்வினால் திறன் குறைவான, சமுதாயத்தில் முன்னேறிய பணம் படைத்த மாணவர்கள், மருத்துவ த்துறையில் இடம் பெறுவர் என்றும், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு அளவிற்கு நீட் தேர்வு முறை திறனை வளர்ப்பதில்லை போன்ற கருத்துக்களை யூகங்கள் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இவைகள் அனைத்தும் முற்றிலும் தவறான கருத்தா கும். மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கருத்து இந்த உயர்மட்ட குழுவினை அவமானப்படுத்துவது போல் உள்ளது.
நடைமுறையில் உள்ள உண்மை நிலையை கவனித்தால், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மற்றும் அதற்கான வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு எழுதுவது மற்றும் தேர்ச்சி பெறுவது எளிதாக அமைந்துள்ளது.
சமூகத்திலுள்ள இதர பிரிவு மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற அரசு மற்றும் இதர வகை பள்ளிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மற்றும் இதர நலிவுற்ற பிரிவினருக்கு இவ்வகை பயிற்சி எட்டாக்கனியாகவே உள்ளது.
அது மட்டுமன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட முறை நுழைவுத் தேர்வு எழுதி, மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேரும் வாய்ப்பு உள்ளதால், அந்தாண்டு 12வது படிக்கும் மாணவர்களுக்கு மாறாக பன்முறை எழுத வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக நீட் அமைந்துள்ளது.
மேலும், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர் மட்டக்குழு கடந்த ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்க் கப்பட்ட மாணவர்களின் விவரங்களை ஆராய்ந்து, இதனால் கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்ற விவரத்தையும் புள்ளி விவரங்கள் மூலம் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அவற்றின் அடிப்ப டையில் விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்தது.
‘நீட்’ தேர்வு முறை கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதிக்கிறது. மேலும், ‘நீட்’ தேர்வு, பள்ளிக் கூடங்களின் பயிற்று முறையை ஊக்குவிக்காமல், ‘நீட்’ தனிப் பயிற்சியை ஊக்குவிக்கிறது. இதனால், ஒரு மாணவருக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பயிற்சி தேவை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சிக் கட்ட ணங்களும் கூடுதலாக வசூலிக் கப்படுகின்றன. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை எளிய கிராமப்புற மாண வர்களுக்கும், நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வுமுறை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனை உயர்மட்டக்குழு தனது அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளது. உண்மை நிலையும் அதுவே.
உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமான முடிவினை அளித்துள்ளது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.
புள்ளி விவரங் களை ஆய்வு செய்தது மட்டுமன்றி, குழு பொதுமக்களிடம் விரிவாக கருத்து கேட்டு, அதனை வல்லு நர்களுடன் ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் ‘நீட்’ தேர்வுமுறைக்கு எதிரான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
அரசியல் சட்ட அமைப்பில் மாநில அரசுக்கும் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் உள்ளது. எந்த ஒரு சட்டமும், ஏதாவது ஒரு ஒன்றிய அரசின் சட்டத்திற்கு மாறாக இருந்தால் அதற்கு அரசியல் சட்ட அமைப்பு 254(2)ன் கீழ் மாண்புமிகு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு.
சட்டமன்றத்தால் சட்டமே இயற்றக்கூடாது என்று ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுவது, அர சியல் சட்ட அமைப்பின் அடிப் படை கட்டமைப்பையே கேள் விக்குறியாக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவிக்க கட¬ மப்பட்டுள்ளேன்.
எனவே, இச்சட்டமுன்வ டிவினை சட்டப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றிட அனைத்து மாமன்ற உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



