விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் அடையாளமாக“Make your own Art and Craft using waste Materials” என்ற தலைப்பில் போட்டி நடந்தது.
இதில் மாணவிகள் உபயோகமற்ற பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பிளவர் வாஷ், கேரி பேக்குகளில் இருந்து அழகான பூக்கள், தேங்காய் சிரட்டைகளில் இருந்து அழகான பொம்மைகள், உபயோகமற்ற காகிதங்களில் இருந்து அலங்கார விளக்குகள், அட்டைகளில் இருந்து போட்டோ பிரேம்கள், சுவர் அலங்காரப் பொருட்கள் மற்றும் உபயோகமற்ற துணிகளில் இருந்து ஆடைகள், மிதியடிகள் தயாரித்திருந்தனர்.
“Making your Own Indian Food” என்ற தலைப்பில் மாணவிகள் பெண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை சமைத்திருந்தனர்.
எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடிய உணவுகளான முளைகட்டிய தானிய உணவுகள், தானிய தோசைகள், நார்ச்சத்து தரக்கூடிய பழக்கலவை, வாழைத்தண்டு கலவை போன்ற உணவுகள், இரத்த சோகை போக்கக்கூடிய பேரீட்சம்பழ லட்டு, எள் உருண்டை, முருங் கைக்கீரை சூப் வகைகளை தயாரித்திருந்தனர்.
கருவேப்பிலை சாதம், நெல்லிக்காய் சாதம் மற்றும் புத்துணர்ச்சி தரக்கூடிய செம்பருத்தி தேநீர் போன்ற ஆரோக்கிய உணவுகளும் தயாரிக்கப்பட்டன. கல்லூரி நிர்வாகக் குழு செயலாளர் பி.எம்.எஸ்.என்.கே.டி.ராஜவேல் முன்னிலையில் இப்போட்டிகள் நடந்தன.
தலைவர் எம்.எஸ்.ஜி. முருகன், உப தலைவர் எம்.எஸ்.கே.ரவிசங்கர், பொருளாளர் ஏ.எஸ்.ஏ. ஏ.ஜி.பால முருகன், பயிலக முதல்வர் டாக்டர் எஸ்.ஜவஹர், துணை முதல் வர் ஆர்.புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கார்மென்ட் டெக்னாலஜி துறைத் தலைவர் பி.அனிதா போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.



