fbpx
Homeதலையங்கம்ஆதிக்க கலாச்சாரம்!

ஆதிக்க கலாச்சாரம்!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வதற்கு முன்னால் அந்த மாநிலத்தை சேர்ந்த ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எழுத்துப்பூர்வ கருத்து கேட்புக்கு பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான கொலீஜியம் அதுகுறித்து முடிவெடுக்கும் என்பது தான் வழிமுறை.

அதேபோல பணியிடமாற்றம் செய்யப்படும் நீதிபதியின் விருப்பத்தையும், பணியிடமாற்றத்துக்கான அவரது உயர்நீதிமன்ற தேர்வையும் கேட்டறிந்த பிறகு தான் கொலீஜியம் முடிவெடுக்க வேண்டும் என்பதும் நடைமுறை.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்ளும் விசித்திரம் இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.

அரசுக்கோ, சட்ட அமைச்சகத்துக்கோ அதில் எந்தவித பங்களிப்பும் இல்லை என்பது நீதித்துறையை அரசியல் தலையீடு இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.

ஆனால் இதனால் நீதித்துறை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாத செயல்பாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

உயர்நீதிமன்ற, நீதிபதி தலைமை நீதிபதிகளின் பணியிட மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படுமானால் அதனால் மாற்றப்படும் நீதிமன்றத்தில் அவரது சுதந்திரமான செயல்பாடு பாதிக்கப்படும் என்று கூறுவதில் அர்த்தமில்லை.

காரணம் கூறப்படாமல் மாற்றப்படும் போது அது தண்டனை மாற்றம் என்று கருதப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சென்னையிலிருந்து விடைபெறும்போது தன்னால் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணப்படும் ஆதிக்க கலாச்சாரத்தை உடைக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி.

அதென்ன ஆதிக்க கலாச்சாரம் என்பதை அவர் விளக்க கடமைப்பட்டிருக்கிறார்.

படிக்க வேண்டும்

spot_img