நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) செல்வம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



