fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டி:கடற்படை அணிக்கு பி.எஸ்.ஜி. கோப்பை

அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டி:கடற்படை அணிக்கு பி.எஸ்.ஜி. கோப்பை

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 56-வது ஆண்கள் அகில இந்திய அளவிலானகூடைப்பந்து போட் டிகள், கடந்த 5 நாட்களாக, கோவை யில் பி.எஸ்.ஜி. டெக்உள் விளையாட்டு அரங்கத்தில் நடை பெற்றது.
இதில், பஞ்சாப் போலீஸ் அணி – பஞ்சா ப், இந்திய கடற்படை அணி -லோனாவாலா, ரெ ஸ்ட்ஆஃப் தமிழ்நாடு அணி -சென்னை), ஸ் போர்ட்ஸ் ஹால்டல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி -சென்னை, ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) – சென் னை, கேரளாமாநில மின்சார வாரிய அணி – கேரளா, கேரளா போலீஸ் அணி – கேரளா மற்றும் பா ங்க் ஆஃப்பரோடா -பெங்களூரு ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.

மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில், கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து பாங்க் ஆஃப் பரோடா அணி விளையாடியது.
இதில் கேரள மாநிலமின்சார வாரிய அணி 79 & 76 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

இறுதிப்போட்டியில், இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணிவிளையாடியது.இதில் இந்திய கப்பல் படை அணி 108 & 85 என்ற புள்ளிக் கணக்கில் வென்று,பி.எஸ்.ஜி. கோப்பையை தட்டிச்சென்றது.
விழா வில், முதல் பரிசு பெற்ற இந்திய கடற்படை அணி க்கு ரூ.1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜிகோப்பை, இரண்டாம் இடம் பெற்ற ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு
அணிக்கு ரூ.50,000 மற்றும்கோப்பை, மூன்றாம் இடம் பெற்ற கேரள மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.20,000 மற்றும் கோப்பை, நான் காம் இடம் பெற்ற பாங்க் ஆஃப் பரோடா அணிக்கு ரூ.15,000 மற்றும் சிறந்தவிளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட இந்திய கப்பல்படை அணி வீரர் குர்விந்தர்சிங்குக்கு ரூ.10,000 ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

விழாவுக்கு, பிஎஸ்ஜி கல்விநிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ் ணன்முன்னிலை வகித்தார்.சி.ஆர்.ஐ. பம்ப் நிறு வனங்களின் இணை நிர்வாக இயக்குனரும், கோவைமாவட்ட கூடைப்பந்து கழக தலை வருமான ஜி.செல்வராஜ் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.ஏற்பாடுகளைகோவை பி. எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர் ருத்ர மூர் த்தி,செயலாளர் பழனிச்சாமி உட் பட பலர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img