கலைத்துறையில் ஆர்வமுடைய இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக, கோவை க்ளஸ்டர் ஸ்டுடியோ மற்றும் பிரபல ஆஹா ஒ.டி.டி.தளம் ஆகியோர் இணைந்து யங் கிரியேட்டர்ஸ் சம்மிட் எனும் புதிய பயிற்சி பட்டறையை துவங்கியுள்ளனர்.
சினிமா என்ற பெரிய திரையில் வாய்ப்புகளுக்காக ஏங்கிய ஒரு காலம் இருந்த நிலையில், நவீன தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கலைத்துறை தற்போது வேறு ஒரு பரிணாமத்தில் அனை வருக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்கும் துறையாக மாறி உள்ளது.
குறிப்பாக ஒ.டி.டி. தளங்களின் வருகை சினிமா துறையின் பன்முகங்களை வெளிக்கொண்டு வரத் துவங்கியுள்ளன. அந்த வகையில் பிரபல ஒ.டி.டி தளமான ஆஹா கோவை க்ளஸ்ட்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து புதிய படைப் பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை துவக்கி உள்ளது.
கோவை க்ளஸ்டர் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க நிகழ்ச்சியில், ஆஹா ஒடிடி தளத்தின் தலைமை செயல் அதிகாரி அஜித் ஆக்ரோ மற்றும் க்ளஸ் டர் ஸ்டுடியோ நிறுவனர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய யங் கிரியேட்டர்ஸ் சம்மிட் பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பிரபல இயக்குனர் நெல்சன் வெங் கடேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது இளம் படைப்பாளிகளின் திறமையை வெளிக்காட்ட ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், அந்த வகையில் தற்போது ஆஹா ஒ.டி.டி.தளம் இளம் படைப்பாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என தெரிவித்தார்.
புதிய இளம் படைப்பாளிகள்
தற்போது கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் சினிமா துறையில் தவிர்க்க முடியாத சென்டராக இருப்பதாக கூறிய அவர், இது போன்ற முயற்சிகள் இன்னும் கூடுதலாக புதிய இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பயிற்சி பட்டறையில், திரைப்படம், குறும்படம், வெப்சீரிஸ், ஆவணப்படம், போன்ற வடிவங்களில் ஓடிடி தளங்களுக்கு எவ்வாறு வடிவமைப்பது, எவ்வாறு சமர்ப்பிப்பது போன்றவை குறித்தும், மேலும் எழுத்தாளர்கள் சுபா மற்றும் இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் மாஸ்டர் கிளா ஸ்களை நடத்த உள்ளனர்.