fbpx
Homeபிற செய்திகள்வயது பேதமின்றி அனைவரும் பின்பற்றும் ‘யோகா’- ‘யோகா மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேச்சு

வயது பேதமின்றி அனைவரும் பின்பற்றும் ‘யோகா’- ‘யோகா மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேச்சு

சாதி, மதம், இனம், வண்ணம், பால், நாடுகளைக் கடந்த கார ணத்தால் பலன்களைப் பெற எல்லாப் பிரிவு மக்களுக்கும், வயது பேதமின்றிப் யோகாவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று ஐதரா பாத்தில் என்சிசி அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற ‘யோகா மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் மத்தியத் துறைமுகம் கப்பல் நீர்வழிகள் மற்றும் அயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசினார்.

முதன்மை விருந்தினர் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: சந்தோஷம் மற்றும் ஆரோக்கியத் திருவிழாவாக யோகாவை அனைவரும் கொண்டாட இதுவொரு அற்புதமான வாய்ப்பாகும். அனைவரும் யோகா பழக வேண்டும்.

உலகளவில் யோகாவை எடுத்துச் சென்றமைக்கும், நலமான ஆரோக்கியத்துக்காக இதை மக்கள் இயக்கமாக மாற்றியமைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. யோகா உங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், அழகையும் தரும் என்றார்.

மத்தியத் துறைமுகம், கப்பல், நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோ வால் பேசியதாவது:
இந்தியாவின் ஒளிரும் பாரம்பரியப் பெருமையின் அடையாளமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 தேதியை யோகா தினமாக உலகமே கொண்டாடத் தொடங்கிய பின்னர், யோகாவுக்கு முன்னெப்போதும் இல்லாத கௌரவவும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், யோகாவை பிரம்மாண்ட சுகாதாரப் பாதுகாப்பு இயக்கமாக மாற்றவும், பிரதமர் நரேந்நிர மோடி தானே முன்நின்று வழிநடத்தி அயராத முனைவுகள் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது முதல் யோகா தொடர்ந்து மேலும் மேலும் உலகின் பல மக்களைச் சென்றடைந்து உடல், மனம், ஆன்மிக நல வாழ்வுக்கு உறுதுணையாகப் பலன் தருகிறது.

சாதி, மதம், இனம், வண்ணம், பால், நாடுகளைக் கடந்த காரணத் தால் பலன்களைப் பெற எல்லாப் பிரிவு மக்களுக்கும், வயது பேதமின்றிப் யோகாவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நடப்பு ஆண்டு யோகா தினத்துக்கான மைய நோக்கம் ‘வசுதைவகுடும்பக யோகா’ ஆகும். தேச மற்றும் சர்வதேச அளவில் யோகா குறித்த மனநிலை, உள்ளுணர்வு மற்றும் ஏற்பைப் பிரதிபலிக்கிறது.

கிராம வாசிகள் தொடங்கி நகர வாசிகள் வரை, மாணவர்கள் இல்லத்தரசிகள் தொடங்கி கார்பொரேட் ஊழியர்கள் வரை, உடலாலும், மனத்தாலும் ஆரோக்கியமாக வாழ அனைவரும் யோகாவை ஏற்றுள்ளனர். பிரதமரின் தளராத முயற்சிகள் காரணமாக யோகாவின் தாக்கமும், உலகச் சமூகத்தின் ஏற்பும் அதிகரித்துள்ளன.

இன்றைக்கு, முழுமையான ஆரோக் கியத்துக்கும், நலவாழ்வுக்கும் மிகச் சிறந்த நிவாரணியாக யோகாவை உலகம் ஏற்றுள்ளது.

‘யோகா பெருங்கடல் வளைவு’

உலகளவில், யோகா பெருங்கடல் வளைவு, ஜூன் 21 அன்று மத்தியப் பாதுகாப்பு, மத்திய வெளிவிவகாரம், மத்தியத் துறைமுகம் கப்பல் நீர்வழிகள் அமைச்சகங்களின் உதவி யுடன் உருவாக்கப்படும். இந்தப் பயிற்சியில் பல துறைமுகங்களிலும், கப்பல்களிலும் யோகா நடைபெறும்.

நட்பு நாடுகள் இணைந்து கொள்ளும். அதேபோல், ப்ரைம் மெரிடியன் கோட்டில் அல்லது அருகேயுள்ள நாடுகள் – ஆர்க்டிக் தொடங்கி அண் டார்டிகா வரை யோகா பயிற்சிகளில் இணைந்து கொள்ளும் என்றார்.

எம்டிஎன்ஐஒய் இயக்குநர் த்ரிஷ்வர் வி பசவராடி பொது யோகா புரோடோகோல் (சிஒய்பி) முன்நின்று நடத்த அவரைப் பின்பற்றி ஆயிரக் கணக்கானோர் தெய்வீக ஆன்மிகச் சூழலில் யோகா செய்தனர்.

‘யோகா மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் 50,000-க்கும் அதிகமான ஆர்வலர்கள் பங்கேற்றனர். மத்தியக் கலாச்சாரம் சுற்றுலா மற்றும் டிஓஎன்இஆர் கிஷன் ரெட்டி, மத்தியப் பெண்கள், குழந்தை வளர்ச்சிமற்றும் ஆயூஷ் இணை அமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மஹேந்திரபாய் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பிரபல பூப்பந்து விளையாட்டு வீரரும் பயிற்சியாளரும் பத்ம பூஷன் விருதாளருமான புலேலா கோபிசந்த், திரைப்பட நட்சத்திரங்கள் ஸ்ரீலீலா விஷ்வக்சென் கிருஷ்ண சைதன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிலையம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘சர்வதேச யோகா தினம்’ கொண்டாட்டங்களின் 25 நாள் கவுண்ட் டவுன் ஆரம்பமானது.

படிக்க வேண்டும்

spot_img