fbpx
Homeபிற செய்திகள்இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் 1053 பேருக்கு ரூ.91.19 லட்சம் பல நலத்திட்ட உதவி

இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் 1053 பேருக்கு ரூ.91.19 லட்சம் பல நலத்திட்ட உதவி

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 07.05.2021 அன்று பதவியேற்று 06.05.2023 அன்றுடன், ஈராண்டு நிறைவடைந்துள்ளது.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் கடந்த ஈராண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஈராண்டில் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடித் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், ஆவின் பால் விலை குறைப்புத் திட்டம், விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், கொரோனா சிறப்பு நிவாரண உதவிகள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண நிதியுதவிகள், கொரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு மற்றும் தடுப்புப் பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசித் திட்டம், கொரோனா நிவாரண நிதியுதவிகள், நடமாடும் காய்கறி விற்பனை நிலையம், வலிமை சிமெண்ட் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு, பனை மேம்பாட்டுத்திட்டம், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புத் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், நெல் தரிசில் பயறு சாகுபடித் திட்டம், வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கும் திட்டம், திருக்கோயில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், திருக்கோயில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்.
திருக்கோயில் புனரமைப்புத் திட்டம், திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், திருக்கோயில் பணியாளர்களுக்கு இரண்டு சீருடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் திட்டங்கள் மூலம் எண்ணற்றோர் பயனடைந்துள்ளனர். தொழில் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.

அரசின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி, நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் 607 பயனாளிகளுக்கு ரூ.6,27,500/- மதிப்பிலான முதியோர், விதவை, ஆதரவற்றோர் உள்ளிட்ட உதவித் தொகைகளும், 239 பயனாளிகளுக்கு ரூ.35.51 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 150 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும்,, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், 47 பயனாளிகளுக்கு பண்ணைக்கருவிகள், தார்பாலின், விசைத்தெளிப்பான், பவர் டில்லர், பண்ணைக்குட்டை அமைத்தல், மரக்கன்றுகள், விதைகள் உள்ளிட்ட ரூ.24.07 லட்சம் மதிப்பிலான உதவிகளும், தொழிலாள்ர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான விபத்து நிவாரணத்தொகைகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.33,450- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும் என 1053 பயனாளிகளுக்கு ரூ.91.19 லட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்களின் பேட்டி:

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், அயன் ரெட்டியாபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 66) கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய் உள்ளது. இதற்காக மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சைக்கான மாத மாத்திரைகள் வாங்கி வருவேன். வயதானதால் மிகவும் சிரமப்பட்டேன்.
தற்போது, வீடு தேடி பரிசோதனையும் செய்து, மாதத்திற்கான மாத்திரைகளும் வழங்குவதால், இந்த திட்டம் வரப்பிரசாதமாக உள்ளது. வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டிய முதல்வருக்கு கோடான கோடி நன்றி என்றார்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சோழபுரம் ஊராட்சி, தேசிகாபுரத்தை சேர்ந்த ஜெயபால் கூறியதாவது:
எங்க ஊர்ல தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு தண்ணீர் வசதி இல்லாமல் கஷ்;டப்பட்டோம். குடிநீருக்காக வெகு தூரம் செல்ல வேண்டியிருந்தது. அதனால் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிதரக் கேட்கப்பட்டிருந்தது.

அந்த மனுவின் மீது நேரடி ஆய்வு செய்யப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்போது போதிய அளவு குடிநீர் கிடைக்கிறது. வெகுதூரம் செல்லாமல் அருகிலேயே குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்து தந்த முதல்வருக்கு நன்றி என்றார்.

‘இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பு’
அரசுப் பள்ளியில் பயின்று 7.5% இட ஒதுக்கீட்டில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை பெற்ற சங்கீதா தெரிவித்ததாவது:
தென்காசி மாவட்டம், புல்லுகாட்டுவலசை கிராமத்தில் அரசுப்பள்ளியில் பயின்றேன். தந்தை வாகன ஓட்டுநர். தாய் பீடித்தொழில் செய்து வருகிறார்.

அரசுப்பள்ளியில் பயின்ற, எனக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில்வதற்காக இடம் கிடைத்து, விருதுநகர் மருத்துவக்கல்லூரில் முதலாமாண்டு சேர்ந்துள்ளேன். இங்கு எனக்கு தங்குமிடம், உணவு, பாடப்புத்தகங்கள், மருத்துவ உடைகள், மருத்துவ உபகரணங்கள் இலவசமாக கிடைத்துள்ளன.

புதிதாக கட்டப்பட்டுள்ள விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டில் படிப்பது பெருமையாக உள்ளது. சாதாரண குடும்ப பின்புலத்தில் இருந்து அரசுப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களும் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவர் ஆக முடியும் என்ற நம்பிக்கை அளித்த முதல்வருக்கு நன்றி என்றார்.

‘புதுமைப் பெண்’ திட்டம்
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மாணவி சௌமியா தெரிவித்ததாவது:
3-ம் வருடம் பி.ஏ படிக்கிறேன். பெற்றோர் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.

புதுமைப் பெண் திட்டம், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வசதி இல்லாத குடும்பப் பின்னணியில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளுக்கு, இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000/- ஊக்கத்தொகையை கொண்டு, படிப்பிற்கு தேவையான செலவுகளை செய்ய முடியும்.

சின்ன சின்ன படிப்பு செலவிற்காக பெற்றோர்களை கஷ்டப்பட வைக்காமல், இந்த தொகை மூலம் பூர்த்தி செய்ய முடியும். இந்த ஊக்கத்தொகையினை அளித்த முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img