Homeபிற செய்திகள்கொல்லிமலை பகுதியில் நீட்டிக்கப்பட்ட பஸ் வசதி

கொல்லிமலை பகுதியில் நீட்டிக்கப்பட்ட பஸ் வசதி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், பெரப்பன்சோலை மற்றும் பெத்தநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி ஆகியோர் முன்னிலையில் புதிய பேருந்து வழித்தடத்தை நீட்டித்து அரசு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தம்மம்பட்டி கிளையிலிருந்து தற்போது பி28 வழித்தட எண் வழியாக தற்போது தம்மம்பட்டி, நாரைக்கிணறு, இராஜபாளையம், மெட்டாலா உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட்டு வந்தது, இனி அந்த பேருந்து நாரைக்கிணறு, பிலிப்பாக்குட்டை, கப்பலூத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தம்மம்பட்டியில் இருந்து காலை 7:00 மணி முதல் மாலை 4:40 வரை பேருந்து இயக்க வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தம்மம்பட்டி கிளையில் இருந்து டீ2 வழித்தட எண் வழியாக தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை வரை காலை 7:50 மணி முதல் மாலை 5.35 மணி வரை பேருந்து இயக்க வழித்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img