fbpx
Homeபிற செய்திகள்வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்

வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் நடைபயணத்தை மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில், வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலையில் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

இது குறித்து நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பேசியதாவது: இளைய தலைமுறையினர் பெருமளவில் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பக்கவாத நோய் பாதிப்பு வராமல் தடுக்க மற்றும் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் கோட்டை மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு நடைபயணத்தில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் வி.எஸ். முருகன், ஜெய்சங்கர், சுமதி மனோகரன், இந்து அறநிலை குழு உறுப்பினர் நீதி (எ) அருணாச்சலம், நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன், பொது மேலாளர் நிதின் சம்பத், நரம்பியல் துறை தலைமை மருத்துவர் சிற்றம்பலம் மற்றும் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ மாணவியர், நறுவீ வீ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img