fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வேகா ஜூவல்லரிதங்க நகைகள் கண்காட்சி

கோவையில் வேகா ஜூவல்லரிதங்க நகைகள் கண்காட்சி

வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண் களுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சி நவம்பர் 1, மற்றும் 2-ல் கோவையில் நடந்தது.
தென்னிந்தியாவின் முதல் முறையாக மணப் பெண்ணுக்கான தங்க நகை கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் கோவையில் வேகா ஜூவல்லரி சார்பில் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகள் என இரு நாட்கள் நடைபெற்றது.

நேர்த்தி, கைவினை, பாரம்பரிய கலைநயத்திற்கு பெயர் பெற்ற வேகா ஜூவல்லரி, கோவையில் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக மணப் பெண் அழகு மிளிரும் நகை கண்காட்சியை நடத் தியுள்ளது. தங்கம், வைரம், போல்கி மற்றும் சிஸ் நகைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தன.
உத்வேகம் அளிக்கும் நேர்த்தியான பாரம்பரிய நிகழ்வு – இந்த மாபெரும் நகை கண்காட்சி, கலாச்சாரத்தையும் கைவினை திறனையும் பிரதிபலிப்பதாக மட்டும் அல்லாமல், பாரம்பரியத்தை சந்திக்கும் புதிய கண்டு பிடிப்புகளாகவும் இருந்தன.

நுண்ணிய போல்கி தொகுப்புகள், மணப்பெண் வைர நகைகள், குந்தன் கலை திறன்கள், கோயில் தங்க நகைகள், குறைந்த அளவிலான பாரம் பரிய படைப்புகள் கண் காட்சிக்கென வடிவ மைக்கப்பட்டு இருந்தன.
துவக்க விழா நிகழ்விற்கு கவுரவ விருந்தினராக கோவை எமரால்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.சீனிவாசன், ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி நிர்வாக அறங்காவலர் டி.ஆர்.கே.சரஸ்வதி, திருப்பூரில் ஜவுளி மற்றும் வடிவமைப்பில் சிறந்தவராக திகழும் டேப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஜெ.வி.சாலினி ஆகியோர் பங்கேற் றனர்.

படிக்க வேண்டும்

spot_img