fbpx
Homeபிற செய்திகள்நெய்வேலி பகுதியில் என்.எல்.சி.,யில் உலக ஓசோன் தினம்

நெய்வேலி பகுதியில் என்.எல்.சி.,யில் உலக ஓசோன் தினம்

நெய்வேலி பகுதியில் தூய்மையே சேவை பிரசாரம் நடந்தது. என் எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமையில், நிறுவன இயக்குநர்கள், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி,என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

இந்த தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பரவலான பங்கேற்பு மற்றும் அதன் சிறப்பு பிரசாரம் 4.0 மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட ‘தூய்மையே சேவை இயக்கம் 2024’ க்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள என்எல்சி திட்டமிட்டுள்ளது.

இதே நாளில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு,கார்பன் உமிழ்வை குறைப்பதற்கும்,ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்குமான உலகளாவிய முயற்சியை ஆதரிக்கும் வகையில், என்எல்சிஐஎல் தலைமை உயர்மட்ட குழுவினர், மிதிவண்டி மூலம் அலுவலகத்திற்கு பயணித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி, சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள் வதில் கூட்டுப் பொறுப் பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு உலக ஓசோன் தினத்தின் கருப்பொருளான மாண்ட்ரியல் நெறிமுறை, ஓசோன் அடுக்கை சரிசெய்தல் மற்றும் காலநிலை மாற் றத்தைக் குறைத்தல் என்பதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால சந்த தியினருக்காக இப்பூமிக் கோளை பாதுகாப்பதற் கான நமது கடமையை சரியான நேரத்தில் நினைவூட்டுவதாகும், என்றார்.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின் அதிகாரிகள், தொழிலாளர்கள் ஊழியர்கள். உள்ளூர் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img