ரீடு சேவை நிறுவனமானது 23 வருடங்களாக குழந்தைகள், பெண்கள், பழங்குடியினர் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
பாரத் சட்ட கல்லூரி மற்றும் ரீடு நிறுவனமும் இணைந்து பழங்குடியினர் கிராமங்களான மாமரத் தொட்டி மற்றும் உகினியம் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு வீதி நாடகங்கள் மூலம் சட்ட விழிப்புணர்வு, அடிப்படை உரிமை சட்டம் மற்றும் பிற சட்டங்கள், நலத்திட்டங்கள் அரசு பணிக்கு தேர்வுகள் எழுதுவது குறித்தும் விளக்கமாக கூறினார்கள்.
இந்த சட்ட விழிப்புணர்வில் பாரத் சட்டக் கல்லூரி துணை பேராசிரியர்கள் சோபியா,யுவன் சங்கர், வனக்காப் பாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரீடு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் கள ஒருங்கிணைப்பாளர் சசி இந்த சட்ட விழிப்பு ணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.



