fbpx
Homeபிற செய்திகள்திறமையான என்ஜினியர்களை பணியமர்த்த வேர்ல்டுலைன் நிறுவனம் திட்டம்

திறமையான என்ஜினியர்களை பணியமர்த்த வேர்ல்டுலைன் நிறுவனம் திட்டம்

உலக அளவில் மின்னணு பணம் செலுத்தும் சேவைகள் தொழில் நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் வேர்ல்டுலைன் நிறுவனம், பேடெக் முன்னோடி திட்ட பயிற்சியை அளிப்பதற்காக ,சென்னையில் உள்ள 8 பிரபல என்ஜினியரிங் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது.

வேர்ல்டுலைன் இந்தியா அதன் வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக பேடெக் முன்னோடித் திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் சிறந்த என்ஜினியரிங் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகும்.

பேடெக் முன்னோடி

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டி டியூட் ஆப் டெக்னாலஜி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் கல்லூரி, பிஎஸ்ஏ கிரசண்ட் இன்ஸ்டி டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜினியரிங் கல்லூரி, ராஜ லட்சுமி என்ஜினியரிங் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து பேடெக் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

3-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பேடெக் முன்னோடி திட்டத்தில் பயிற்சி பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இது குறித்து தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேர்ல்டுலைன் செயல் தலைவர் தீபக் சந்தனானி கூறியதாவது:

இந்தத் திட்டம் என்ஜினியரிங் கல்லூரிகளில் அவர்க ளின் பாடத்திட்டத்தில் கட்ட மைக்கப்பட்ட தொழில் சார்ந்த பயிற்சியை வழங்குவதற்கும், வேலைவாய்ப்பிற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம் கார்ப்பரேட் உலகில் புதிய மாற்றத்தை உறுதி செய்வதற்கும் உதவும். பணம் செலுத்துதல், வாழ்க்கை முறை மற்றும் வர்த்தகம் போன்றவற்றிற்கான புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து வடிவமைக்கும்போது, அதை செயல்படுத்துவதற்கு திறமைமிக்க இளைஞர்களை எதிர் பார்க்கிறோம் என்றார்.

வேர்ல்டுலைன் இந்தியா தனது மும்பை, புனே, பெங்களூர், சென்னை அலுவலகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 100 பயிற்சி பொறியாளர்களை பணி அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இதன் பாடத்திட்டத்தில் புதிதாக சேருபவர்கள் Net, C++, Testing, PHP, Python, MYSQL, Postgres மற்றும் பிற சாப்ட்வேர்களை கற்றுக்கொள்வதன் மூலம் இளம் பட்டதாரிகள் முதல் முழு-ஸ்டாக் டெவலப்பர்கள் வரை தங்கள் மாற்றுப் பயணத்தைத் தொடங்க முடியும்.

படிக்க வேண்டும்

spot_img