மருத்துவ அவசர கால சூழ்நிலையில் எப்படி துரிதமாக செயல்படுவது என்பது குறித்த விழிப்பு ணர்வை, கோவை மாவட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்களுக்கு எடுத்துரைக்க கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்து வமனை சார்பில் மருத்துவ கருத்தரங்கம், மருத்து வமனை வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ முதல்வர் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.சுகுமாரன், எஸ்.என்.ஆர்.அறக்கட்டளையின் முதன்மை தலைமை அதிகாரி சி.வி.ராம்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் இயற்கை பேரிடர் (Code Yellow) பற்றி அவசர சிகிச்சை மருத்துவர் மஞ்சுநாதன், தீவிர அவசர சிகிச்சை குறித்த முதல் கட்ட நடவடிக்கை பற்றி அவசர சிகிச்சை மருத்துவர் பார்த்திபன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆப் ரேட்டர்களிடம் தெரிவித்தனர்.
கோவை, கோவையை சுற்றியுள்ள பல நகரங்களில் இருந்து 100 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.