fbpx
Homeபிற செய்திகள்70 இந்திய ஓவியங்களை 70 நிமிடத்தில் வரைந்து சிறுவர்கள் அசத்தல்

70 இந்திய ஓவியங்களை 70 நிமிடத்தில் வரைந்து சிறுவர்கள் அசத்தல்

கோவை போத்தனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரம்பரிய ஓவியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாரம்பரிய ஓவிய போட்டி நடைபெற்றது.


இப்போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100-க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 70 நிமிடத்தில் 70 இந்திய பாரம்பரிய ஓவியம் வரைந்து சாதனை படைத்தனர்.


மேலும் இவர்கள் வரைந்த ஓவியங்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஓவி யத்தில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இது குறித்து ஓவிய ஆசிரியர் அண்ணி கூறுகையில், “மறைக்கப்பட்ட கலைகள் மற்றும் மறைந்த கலைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த போட்டி 6வது முறை நடைபெற்றது.


இந்திய கலைகள் மற்றும் பாரம்பரிய கலைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த ஓவிய போட்டி நடைபெற்றது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img