Homeபிற செய்திகள்உலக தலைக்காய விழிப்புணர்வு தினம்: கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக பைக் ஆம்புலன்ஸ் வாகனம் துவக்கவிழா

உலக தலைக்காய விழிப்புணர்வு தினம்: கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக பைக் ஆம்புலன்ஸ் வாகனம் துவக்கவிழா

உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக பைக் ஆம்புலன்ஸ் வாகனத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி பந்தயசாலை பகுதியில் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம்தேதி உலக தலைக்காய விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அனைத்து மருத்துமனைகளில்ம் தலைக்காயம் குறித்து இம்மாதம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை பந்தயசாலையில் ராயல்கேர் மருத்துவமனை சார்பாக உயிர்காக்கும் முதலுதவி அளிக்கும் வகையில் இரண்டு இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் வாகனத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந் தித்த அவர் கூறியதாவது:

பொதுமக்கள் முறையாக சாலை விதிகளை பின்பற்றினாலே விபத்துக்களை குறைத்துவிடலாம். ஆனால் பொதுமக்கள் பலரும் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை இதனால் தலைகாயங்கள் அதிகஅளவில் ஏற்படுகின்றது.

மேலும் போக்கு வரத்து நெரிசல், குறுகலான பாதைகளில் விபத்து ஏற்படும் பொழுது பாதிக்கபட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் இயங்கும் இதற்காக கோவை மக்கள் 91434-91434 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றார். இதனை தொடர்ந்து தலைக் காயம் குறித்த விழிப்புணர்வு நடைப் பயணமும் இங்கு நடைபெற்றது இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மனுநீதி, இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் ராமலிங்கம், செங்கபள்ளி நீலாம்பூர் என்ஹெச் 544 திட்ட தலைவர் ராஜேஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img