fbpx
Homeபிற செய்திகள்அனைவரும் வாக்களிக்க மாரத்தான்

அனைவரும் வாக்களிக்க மாரத்தான்

அனைவரும் வாக்களிக்க வேண்டும், வன்முறை இல்லாமல் உலகில் அமைதி நிலவ  வலியுறுத்தியும் ஈரோட்டில் இன்று 3,5,10 கிலோமீட்டர் பிரிவுகளின் கீழ் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது .

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் சார்பில், இந்தியா முழுவதும் 67 இடங்களில் ஒரே நேரத்தில்  இந்த மாரத்தான் துவங்கியது.

ஈரோடு திண்டல் சுற்று வட்டச் சாலையில் இருந்து  ஈரோடு கலைக் கல்லூரியை மராத்தான் அடைந்தது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

இந்த ஓட்டப்பந்தயத்தில் முதல் மூன்று  இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசும் ,கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

படிக்க வேண்டும்

spot_img