ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் விழிப் புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத் தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியானது, நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அரு கில் உள்ள பயணியர் மாளிகையில் தொடங்கி, திருச்சி சாலையில் தங்கம் மருத்துவமனை வளாகத் தில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தங்கம் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து கர்ப்பபை வாய்ப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். முன்னதாக, இந்த ஆண்டு புற்றுநோய் கருப்பொருளான தனித்தன்மையால் ஒன்றிணைவோம் என்பதை மையமாக கொண்டு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்பேரணியில், நாமக் கல் மாவட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், இந்திய மருத்துவ சங்கத்தினர், மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.