fbpx
Homeபிற செய்திகள்கலை, கலாச்சார போட்டிகளில் நந்தா கலைக்கல்லூரி அசத்தல்

கலை, கலாச்சார போட்டிகளில் நந்தா கலைக்கல்லூரி அசத்தல்

2 நாள் மாநில அளவிலான ஹிலாரியோ 25 (கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் கலாச்சார போட்டிகள்) ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17 வது ஆண்டாக நடைபெற்றது.

கல்லூரித் தலைவர் வி.சண்முகன், செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, முதல்வர் மனோகரன், நிர்வாக அதிகாரி வி.சி சீனிவாசன், இணை பேராசிரியர்கள் மோகன்ராஜ் மற்றும் செல்வி ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்த் துறை தலைவர் கோமதி தலைமை தாங்கினர்.

தொலைக்காட்சி கலைஞர்கள் அருள்பிரகாஷ், பவித்ரா லட்சுமி, சரத், தங்கதுரை, ராவணராம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது.

நந்தா கல்லூரி மாணவர்கள் பல போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்றனர்.
இந்த நிகழ்வில் மாநிலத்தில் இருந்து 120 கல்லூரிகளைச்சேர்ந்த சுமார் 3000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img