fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் மகளிர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிதம்பரத்தில் மகளிர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அல்ஜன்னா மகளிர் அரபிக் கல்லூரி 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அம் பலத்தாடி மடம் தெருவில் நடைபெற்றது.

என்டிஎப் மாவட்ட தலைவர் முஹம்மது அம்மார் தலைமை வகித்தார். உறுப்பினர் தாஜுதீன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக என்டிஎப் நிறுவன தலைவர் ஜைனுல் ஆபிதீன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் கல்லூரி முதல்வர் யாசிர் அரபாத் இம்தாதி, பேச்சாளர் இப்ராஹீம் உமரி, பொருளாளர் சேக்ஹசன், போராசியர்கள் வஹிதா பேகம் ஆலிமா, ஜஸ்ரா, ஆலிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை தவ்ஹீத் பேரவை தலைவர் ஷேக் முஹம்மது தொகுத்து வழங்கினார்.

இதில் பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள், பெற்றோர்கள், சிதம்பரம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், கடலூர் மாவட்ட தவ்ஹீத் பேரவை, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் இஸ்மாயில் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img