கோவை ஆயுதப்படை போலீசாருக்கான வாராந்திர கவாத்து மற்றும் ஆயுதப் பயிற்சி இன்று ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அணிவகுப்பு மரியாதையை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார். அருகில் மாநகர காவல் துணை ஆணையர் கே.சரவணகுமார், ஆயுதப்படை உதவி ஆணையர் ஏ.சேகர் ஆகியோர் உள்ளனர். பின்னர் ஆயுதப்படையினரிடம் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் குறைகளை கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.



