Homeபிற செய்திகள்ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப் படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தி னம் வினாடிக்கு 600 கன அடியாக சரிந்தது. பின்னர் நேற்று 1,000 கன அடியாகவும், இன்றுகாலை 2,000 கன அடி யாகவும் அதிகரித்த நீர்வரத்து, தற்போது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் தண்ணீரின்றி பாறைகளாகக் காட்சிய ளித்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வ ரத்து அதிகரித்து, மெயின் அருவி, சின்ன அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.
நீர்வரத்து அதிகரித்துள் ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகையை எதிர்பார்த்து பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல்
கலைஞர்கள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img