fbpx
Homeபிற செய்திகள்கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் தொழிற்கல்வி கருத்தரங்கம்

கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் தொழிற்கல்வி கருத்தரங்கம்

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “ஷோஸ்கில்ஸ் 1.0” என்ற தலைப்பில் தொழிற்கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சுமார் 40 தொழில்துறை பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரி செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா, டாடா ஆட்டோ காம் போனன்ட்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வெப்ப மேலாண்மை பிரிவு தலைவர் டாக்டர் ராஜமாணிக்கம், சின்னவேடம்பட்டி தொழிற்சங்கத் தலைவர் தேவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் டாக்டர் ராஜமாணிக்கம், அருண் ஜி. பாய் (ஏபிபி லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய பொறியியல் மேலாளர்), தினேஷ் கே.சுந்தரவேலு (தமிழ்நாடு ஆராய்ச்சி பூங்கா அறக்கட்டளை), சோனெட் சேவியர் (சிர்கோர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு தொழில் துறையின் எதிர்பார்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வி தொழில் இடைவெளியை குறைப்பது குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.

இக்கலந்துரையாடலை எல் & ஏ.எம்.பி டி ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மேலாளர் கவுதம் கல்யாண் வழிநடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img